அவதூறு பரப்புகிறார்கள்: நடிகை பவித்ரா புகார்

அவதூறு பரப்புகிறார்கள்: நடிகை பவித்ரா புகார்

Published on

பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் தமிழில், ‘கவுரவம்’, ‘அயோக்யா’, ‘க/பெ.ரணசிங்கம்’, ‘வீட்ல விசேஷம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரும் தெலுங்கு நடிகர் நரேஷும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் சில மாதங்களுக்கு செய்திகள் வெளியாயின. நரேஷ், தமிழில் ‘நெஞ்சத்தை அள்ளித்தா’, ‘பொருத்தம்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்தபோது, நரேஷின் 3வது மனைவி ரம்யா, அவர்களை அடிக்கப் பாய்ந்தச் சம்பவம் சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தன்னைப் பற்றி ஆபாசமாகவும் பொய்யான பரப்புரைகளையும் சில யூடியூப் சேனல்கள் பரப்புவதாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார் பவித்ரா லோகேஷ். மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களுடன் தன்னைப் பற்றி சிலர்வேண்டும் என்றே அவதூறு பரப்புவதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in