

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம், ‘டிஎஸ்பி’. டி.இமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில், கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அவர் முன் மண்டியிட்டு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார், விஜய்சேதுபதி.
அப்போது கமல்ஹாசன் பேசும்போது, “நான் இங்கு வந்தது விஜய் சேதுபதி எனும் கலைஞனுக்காக அல்ல. என்னைப் போலவே சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலுக்காகத் தான்.
என் தலைமுறையில் நான் பலரை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் போல சாதிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னை இவர்கள் ஊக்கமாக எடுத்துக்கொள்வது மகிழ்ச்சி. நாளை விஜய் சேதுபதியின் சாதனையை போற்றும் நடிகர்கள் வருவார்கள். அதுதான் சினிமாவின் சுழற்சி” என்றார்.