தமிழ் சினிமா
வீரப்பன் வெப் தொடரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கைக் கதையை இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், வெப் தொடராக இயக்கி வருகிறார். வீரப்பனாக, கிஷோர் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராயும் கன்னட நடிகர் ராஜ்குமார் வேடத்தில் சுரேஷ் ஓபராயும் நடிக்கின்றனர்.
இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி,மலையாள மொழிகளில் உருவாகிறது. இந்தத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதைச் சட்டப்படி சந்திப்பேன் என்று கூறி இருந்த இயக்குநர் ரமேஷ், படப்பிடிப்பை ரத்து செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த தொடரின் படப்பிடிப்பை மீண்டும் தொடர இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
