கபடியை மையப்படுத்தும் பட்டத்து அரசன்

கபடியை மையப்படுத்தும் பட்டத்து அரசன்

Published on

ராஜ்கிரண், அதர்வா முரளி நடித்துள்ள படம், ‘பட்டத்து அரசன்'. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தை சற்குணம் இயக்கி இருக்கிறார். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

வரும் 25-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி சற்குணம் கூறியதாவது: இது, கபடி விளையாட்டை மையப்படுத்திய படம். தஞ்சை பகுதியில் பிரபல கபடி வீரராக விளங்கியவர் பொத்தாரி. அந்தப் பெயரை ராஜ்கிரண் கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளேன். எல்லா கதாபாத்திரங்களுக்கும் பிரபல கபடி வீரர்களின் பெயரையே சூட்டியுள்ளேன். இதன் கதைக்களத்தை திருவையாறு பகுதியில் நடப்பது போன்று அமைத்துள்ளேன். கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவ்வாறு சற்குணம் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in