நடிகர் தனுஷின் ‘வாத்தி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு
Updated on: 
1 min read

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தனுஷ் எழுத்தில் ‘வாத்தி’ படத்தின் முதல் பாடலான ‘வா.. வாத்தி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

படம் வரும் டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் பணிகள் முடிவடையாத நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in