Published : 16 Nov 2022 08:03 PM
Last Updated : 16 Nov 2022 08:03 PM

நயன்தாரா நடிப்பில் ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள்

நயன்தாரா நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாக உள்ளன. திரையுலகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடிப்பில் ‘காட்ஃபாதர்’ திரைப்படம் வெளியானது. இதையடுத்து அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

அந்த வகையில் ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், பிரித்விராஜுக்கு ஜோடியாக 'கோல்டு' படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ‘கனெக்ட்’ படத்தில் நடித்திருக்கிறார். இதன் டீசர் நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் வினய், சத்யராஜ் ஆகியோர் நயன்தாராவுடன் நடித்துள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல அகமது இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா ‘இறைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.மேலும், நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75-வது படமும் உருவாகி வருகிறது. மலையாள படம் ஒன்றிலும் நிவின் பாலி உடன் நடித்து வருகிறார். நயன்தாரா பிறந்த நாளன்று வேறு சில படங்களில் அப்டேட்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x