

நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘குருமூர்த்தி’. இதில் ராம்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா உட்பட பலர் நடித்துள்ளனர். ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரித்துள்ளார்.
படத்தை இயக்கியுள்ள கே.பி.தனசேகரன் கூறியதாவது:
இது வித்தியாசமான போலீஸ் கதை. மலைப்பகுதியில் நடக்கும் கதை என்பதால் கூடலூரில் முழுப் படப்பிடிப்பையும் நடத்தினோம். நட்டி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஒரு பெரிய தொகை காணாமல் போகிறது. அது எங்கு போகிறது, அதன் பின்னணியில் என்ன நடக்கிறது. அதை எப்படி நட்டி கண்டுபிடிக்கிறார் என்பது படம். ராம்கி கேரக்டர் பேசும்படியாக இருக்கும். இவ்வாறு கூறினார்.