Published : 07 Nov 2022 04:08 PM
Last Updated : 07 Nov 2022 04:08 PM

“அதனால்தான் அவர் கமல்...” - பிறந்தநாளில் நெட்டிசன்களின் வாழ்த்து மழையில் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் | கோப்புப் படம்

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கமலுக்கு தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அவற்றிலிருந்து சில...

அஜ்மல் அரசை: “கமல்ஹாசன் சிறுவயதில் திரையுலகில் கால்பதித்து எண்ணற்ற படங்களில் கேரக்டராகவே வாழ்ந்து தனக்கென தனி முத்திரைப் பதித்து உலக அளவில் பேசப்பட்டு தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்தவர். அவரது நடிப்பில் எண்ணற்ற படங்கள் பேசப்பட்டாலும் ‘நாயகன்’, ‘இந்தியன்’ வேறு ரகம். வாழ்த்துகள் உலகநாயகனே.”

Er. யாழன்: “இன்னைக்கு யார் வேண்டுமானாலும் யாரோட ரசிகரா வேணும்னாலும் இருக்கலாம். ஆனா இவரை விட சிறந்த நடிகர்ன்னு யாரும் யாரையும் சொல்ல முடியாது... அது தான் #KamalHaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”

— Gnanakumar (@Gnanaku63674979) November 7, 2022

ESAKKI Muthu: “உலக சினிமாவின் ஒப்பற்ற மகா கலைஞன். நடிப்பு அரக்கன். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.”

Kɩŋʛ Oʆ ĸɩŋʛs: இதைத் தவிர்திருக்கலாம், இப்படி டைரக்ட் பண்ணாம இருந்திருக்கலாம், இந்த ப்ரோகிராம செய்யாம இருந்திருக்கலாம்னு நாம இப்ப சொல்றதையெல்லாம் செய்யாம இருந்திருந்தார்னா அவர் கமல் இல்லை… ஆனா அவர் கமல்... அதனால்தான் அவர் கமல்.. #HBDKamalHaasan”

Ajayan Bala Baskaran: “அன்பே சிவம் தந்த கமல் சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடைய பல படங்கள் வியக்க வைத்தன. ஆனால் என்னை விழ வைத்த படம் அன்பே சிவம்.. இன்னும் எழுந்திருக்கவில்லை.”

Kavitha Bharathy: “கமலஹாசனை கமலஹாசன் என்றே வாழ்த்துவோம்...அதைவிடவும் அவரைப் பெருமைப்படுத்தும் சொல் வேறென்ன இருக்கிறது.”

ஜெயதேவன்: “களத்தூர் கண்ணம்மாவில் அரும்பி, சப்பாணியில் மொட்டாகி, இந்தியனில் மலராகி, நாயகன், தேவர் மகன், விஸ்வரூபம் என மணம் வீசிய கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பிக்பாஸில் உதிர தயாராகி, மக்கள் நீதி மய்யத்தில் மாபெரும் கலைஞன் சருகாகி போனதை வருத்தத்தோடு பகிர்கிறேன். ரஜினி என்னை கவர்ந்தவர் என்றாலும் சிவாஜிக்கு அடுத்து மாபெரும் நவரச நாயகன் கமலை பிடிக்கும். ஏனோ என் மனைவிக்கு ஆரம்பம் முதலே கமலை பிடிக்கவில்லை. பல சாதனைகளை கலையில் சாதித்த கமலை வாழ்த்துகிறேன். தலைவர் கமலுக்கு என் வாழ்த்து இல்லை... வாழிய உலக நாயகன் நீடு அரசியல் கடந்து மகா கலைஞனை கொண்டாட வேண்டியது தமிழர் கடமை.”

Gokul Prasad: “நான் கமலிடம் இருந்தே தொடங்கினேன். எனது திரைப்பட ரசனைக்கு வித்திட்டவர் அவர். அதற்குப் பிறகு நிறைய கண்டுவிட்ட அனுபவத்தில் சொல்கிறேன். இந்தியாவில் வேறு எந்த நடிகனும் கமல் அளவுக்கு உச்சங்களில் நின்று விளையாடியதில்லை. அதுபோக, அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல. தமிழின் சிறந்த படமான ஹே ராமை இயக்கியவர். அருமையான டெக்னீசியன். அவரைப் போல முன்னும் பின்னும் எவரும் இல்லை. ‘நான் இன்னாருக்கு ரசிகன்’ என நுட்பமான அறிவுடைய ஒருவர் நெஞ்சு நிமிர்த்தி கர்வத்துடன் சொல்ல முடியுமானால், அது கமலுக்கு மட்டுமே. நல்ல கலைஞனால்தான் பாண்டித்யமுள்ள ரசிகருக்கும் அந்த ஆணவத்தைக் கடத்த முடியும். அதைச் சாதிப்பது அத்தனை எளிதல்ல.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x