

சோழ மன்னன் ராஜ ராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால், அந்த நாளை, சதய நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.
இனி ஆண்டுதோறும் ராஜராஜ சோழனின் சதய விழா, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ராஜ ராஜசோழனாக நடித்துள்ள ஜெயம் ரவி, சதய விழா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதில், “ராஜ ராஜ சோழனுக்கு சதய விழா. இவரது புகழையும், பெருமையையும் போற்றி, அடுத்த தலைமுறைக்குப் பகிர்ந்து பெருமை கொள்வோம். பொன்னியின் செல்வனாக, ‘திரையில் உம்மை பிரதிபலிக்க’ நான் என்ன தவம் செய்தேனோ?” என பதிவிட்டுள்ளார்.