Published : 02 Nov 2022 03:52 PM
Last Updated : 02 Nov 2022 03:52 PM

குறட்டையை மையமாக கொண்டு உருவாகும் 'ஜெய்பீம்' மணிகண்டனின் புதிய படம்

ஜெய்பீம் மணிகண்டன்

குறட்டை பிரச்சினையை மையமாக வைத்து 'ஜெய்பீம்' புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய நகைச்சுவை திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘விக்ரம் வேதா’, ‘காலா’, ‘சில்லுக்கருப்பட்டி’, ‘ஜெய் பீம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் நகைச்சுவை படம் ஒன்றில் நாயகனாக நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரித்து இருக்கின்றனர். படத்தில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் 'குறட்டை' பிரச்சினையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக இது உருவாகியுள்ளது. சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x