இந்திக்கு மீண்டும் செல்கிறார் ஜீவா

இந்திக்கு மீண்டும் செல்கிறார் ஜீவா
Updated on
1 min read

நடிகர் ஜீவா, சுந்தர்.சி இயக்கியுள்ள ‘காஃபி வித் காதல்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 4ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். அவர் ‘83’ படம் மூலம் இந்திக்கும் சென்றார்.1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை, இந்திய கிரிக்கெட் அணி வென்றதை மையமாக வைத்து இந்தப் படம் உருவானது. இதில் அவர், கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி காந்தாக நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் ஜீவா மீண்டும் ஓர் இந்திப் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் மும்பையில் தொடங்குகிறது. படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in