Published : 31 Oct 2022 06:54 PM
Last Updated : 31 Oct 2022 06:54 PM

வசூலில் பின்தங்கும் அக்‌ஷய் குமாரின் ‘ராம் சேது’

அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராம் சேது' திரைப்படம் வசூலில் பின்னடவை சந்தித்து வருகிறது.

அமேசான் ஸ்டூடியோஸ், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான படம் 'ராம் சேது'. பான் இந்தியா முறையில் திரையரங்குகளில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி தீபாவளிக்கு அடுத்த நாள் படம் வெளியிடப்பட்டது. ஜாக்லீன் ஃபெர்னான்டஸ், சத்ய தேவ், நாசர், நுஷ்ரத் பருச்சா நடித்துள்ள இப்படத்திற்கு டேனியல் ஜார்ஜ் இசையமைத்திருந்தார். ராமர் பாலத்தை கட்டியது யார் என்ற கேள்வியை அடிப்படையாக கொண்டு ஆன்மிக சினிமாவாக உருவான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில், படம் வெளியாகி நாளையுடன் ஒரு வாரம் கடக்கும் நிலையில் இதுவரை மொத்தம் ரூ.56 கோடியை மட்டுமே படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • நாள் 1: ரூ 15.25 கோடி
  • நாள் 2: ரூ 11.40 கோடி
  • நாள் 3: ரூ 8.75 கோடி
  • நாள் 4: ரூ 6.05 கோடி
  • நாள் 5: ரூ 7:30 கோடி
  • நாள் 6: ரூ 7.25 கோடி

ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஒருவாரம் கடந்தும் மந்தமான வசூலால் ரூ.56 கோடியை மட்டுமே எட்டியிருக்கிறது. அண்மைக்காலமாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் படங்கள் தோல்வியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x