

நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்து வருவதாகக் கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வருகிறது. இந்தி நடிகையான அதிதி ராவ், தமிழில், ‘காற்று வெளியிடை’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘சைக்கோ’, ‘ஹே சினாமிகா’ படங்களில் நடித்துள்ளார். தங்கள் காதலை இருவரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
ஆனால், பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்கின்றனர். அதிதி ராவ் பிறந்த தினத்தை முன்னிட்டு சித்தார்த் வெளியிட்டப் பதிவில்,‘இதய இளவரசிக்கு வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இவர்கள் காதலிப்பது உறுதி என்று கூறப்பட்டது. இந்நிலையில்இருவரும் மும்பையில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு விடுமுறையைகழிக்கச் சென்றுள்ளனர். விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.