

அக்ஷய் குமார் நடித்துள்ள இந்தி படம், ‘ராம் சேது'. இது தமிழில் ‘ராமர் பாலம் ' என்ற பெயரில், செவ்வாய்க்கிழமை வெளியாக இருக்கிறது. அபிஷேக் சர்மா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், சத்யதேவ், நுஸ்ரத் பருச்சா, நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதில் இடம் பெற்றுள்ள ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற பாடலை நடிகர் அக்ஷய் குமார் மும்பையில் நடந்த விழாவில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “ரசிகர்களுக்கான தீபாவளி பரிசாக இந்தப் பாடலை வெளியிடுகிறோம்” என்றார்.
படக்குழு கூறும்போது, “தொல்லியல் ஆய்வாளரான அக்ஷய் குமார், ராமர் பாலம் பற்றிய ஆய்வில் ஈடுபடுகிறார். அப்போது நடக்கும் விஷயங்கள்தான் கதை. உண்மைச் சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதில் கற்பனையோ, புனைவோ ஏதுமில்லை. ஆக்ஷன் அட்வெஞ்சர் படம் என்பதால் சிறுவர்களுக்கும் பிடிக்கும்” என்று தெரிவித்தது.