

இந்தோனேஷியாவைச் சேர்ந்த தமிழர் சரண் விசாகன் நாயகனாக அறிமுகமாகும் படம், ‘மிளிர்’.
இதை, சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் சார்பில் எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார். ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், ஏ.வெங்கடேஷ் , டிஎஸ்கே, பரத், யோகி ராம், ஸ்வாதி, இளங்கோ சுரேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். நாகேந்திரன் இயக்கும் இந்தப் படத்துக்கு, கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார். ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாகஉருவாகும் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.