Published : 16 Oct 2022 01:45 PM
Last Updated : 16 Oct 2022 01:45 PM

பிருத்விராஜின் பிறந்தநாளில் வெளியான சலார் பட போஸ்டர்

சலார் பட போஸ்டர்

நடிகர் பிருத்விராஜின் பிறந்த நாளான இன்று, 'சலார்' படத்தில் அவர் நடிக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

'கேஜிஎஃப்2' படத்திற்கு பிறகு பிரபாஸை வைத்து பிரசாந்த் நீல் இயக்கும் படம் 'சலார். ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படத்தில் நட்சத்திர நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் கேரக்டர் லுக் போஸ்டர், அவருடைய பிறந்தநாளான இன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டிருக்கிறது.

'சலார்' படத்தைப் பற்றிய புதிய தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக படக் குழுவினர், நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை வாய்ப்பாகக் கருதி, அவர் நடித்திருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத் தோற்றப் புகைப்படத்தை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். 'சலார்' படத்தில் இடம்பெறும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரம், கதையின் நாயகனான பிரபாஸிற்கு இணையான கதாபாத்திரமாக படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பிருத்விராஜின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், ''பிருத்விராஜ் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர், 'சலார்' படத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வேறு நடிகரை நாங்கள் பெற்றிருக்க இயலாது. படத்தில் அவர் வரதராஜ மன்னார் கதாபாத்திரத்தில் பொருத்திக்கொண்டு நடித்த விதம், அவரது அற்புதமான நடிப்புத் திறமையை நிரூபிக்கிறது. அவரது தனித்துவமான நடிப்பு, ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரித்விராஜ், பிரபாஸுடன் இணைந்து நடித்திருப்பதும், இவ்விருவரையும் இயக்கியதும் அற்புதமான அனுபவம்'' என்றார்.

இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x