Published : 03 Nov 2016 11:43 AM
Last Updated : 03 Nov 2016 11:43 AM

பேயாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் திரையுலகில் பேயை வைத்து காமெடி படங்களை எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் சமீபமாக சேர்ந்திருக்கும் படம் ‘மோ’. புவன்.ஆர்.நல்லான் இயக்கும் இப்படத்தில் சுரேஷ் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, ராமதாஸ், ரமேஷ் திலக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நவம்பர் 18-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் குறித்து இயக்குநர் புவன்.ஆர்.நல்லான் கூறியதாவது:

‘மோ’ ஒரு காமெடி பேய் படம். இதன் 75 சதவீத காட்சிகளை ஒரு பள்ளியில் நடைபெறுவது போன்று எடுத்துள்ளோம். 5 பேர் ஒரு பள்ளிக்குச் செல்கிறார்கள், அங்கு பேய் இருக்கும். பேய்க்கான ப்ளாஷ் பேக் என்ன, அந்தப் பேய் எதனால் அங்கு இருக்கிறது என்பதுதான் கதை.

பெரும்பாலும் காமெடி பேய் படங்கள் என் றாலே லாஜிக்கை மீறிய கமர்ஷியல் படங்களாகத் தான் இருக்கும். ஆனால் ‘மோ’ அப்படி இருக்காது. ஒரு இடத்தில் நிஜமாக பேய் இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இந்தப் படத்தில் இருக்கும். இதில் வரும் நகைச்சுவையும் டார்க் காமெடி பாணியில் இருக்கும்.

தன் இடத்துக்குள் வந்தவர்களைப் பேய் பய முறுத்துவது போன்ற வழக்கமான காட்சிகள் எதுவும் இல்லாமல் புதுமையாக செய்திருக்கிறோம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரைச் சுற்றித்தான் இப்படத்தின் கதையே இருக்கும். அவர் தான் பேயாக வருவார். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் பயந்துபோய் விபூதியெல்லாம் வைத்துக் கொண்டுதான் தினமும் படப்பிடிப்புக்கே வருவார். தினமும் இரவு படப்பிடிப்பு என்பதால் அவர் மிகவும் பயந்துவிட்டார். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரான சுரேஷ் ரவி இப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமாகிறார். படத்தில் காதல் காட்சிகளே கிடையாது. ஒரே ஒரு பாடல் மட்டுமே உள்ளது.

‘மோ’ பட கதையை 5 வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டேன். அந்த காலகட்டத்தில் நிறைய பேய் படங்கள் வரவில்லை. நான் ஒரு தயாரிப்பாளரைத் தேடி, படம் பண்ணி முடிப்பதற்குள் நிறைய பேய் படங்கள் வந்துவிட்டன. அதிகமான பேய் படங்கள் வருவதால் வித்தியாசமாக காட்ட வேண்டும் என்று நிறைய மெனக்கெட்டுள்ளோம். கடந்தாண்டு வெள்ளம் வந்தபோதுதான் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. வெள்ளத்தில் மாட்டிக் கொண்டாலும் நடிகர்கள் படப்பிடிப்புக்கு எந்தவொரு இடையூறும் இன்றி வந்து நடித்துக் கொடுத்ததை மறக்கவே முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x