ஃபஹத் பாசில், அபர்ணா பாலமுரளி, பவன்குமார்
ஃபஹத் பாசில், அபர்ணா பாலமுரளி, பவன்குமார்

ஃபஹத் பாசில் - அபர்ணா பாலமுரளி இணையும் படம் பூஜையுடன் தொடக்கம்

Published on

நடிகர் ஃபஹத் பாசிலுடன், அபர்ணா பாலமுரளி இணைந்து நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் இன்று (அக்.9) தொடங்கியது.

'லூசியா', 'யூடர்ன்' படங்கள் மூலம் கவனம் பெற்ற கன்னட இயக்குநர் பவன்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் நடிகர் ஃபஹத் பாசில். அவருடன் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். 'தூமம்' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 'கேஜிஎஃப்','சலார்' படங்களை இயக்கிய ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திற்கு பூர்ணாசந்திரா தேஜஸ்வி இசையமைக்க ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பான் இந்தியா முறையில் வெளியாக உள்ள இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் படக்குழுவுடன் 'கேஜிஎஃப்' பட இயக்குநர் பிரசாந்த் நீல் கலந்துகொண்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in