

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள நேரடி தெலுங்கு படம், ‘அம்மு’. நவீன் சந்திரா, சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சாருகேஷ் சேகர் இயக்கியுள்ளார். கல்யாண் சுப்ரமணியம், கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் சுப்புராஜ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இருக்கிறார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண், அவள் வலிமையைக் கண்டறிந்து, அவள் கணவனைப் பழிவாங்கும் கதையை கொண்ட இந்தப் படத்தின் டைட்டில் கேரக்டரில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படம், வரும் 19-ம் தேதி அமேசான் தளத்தில் வெளியாகிறது.
படம்பற்றி கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, “அம்மு ஒரு பழிவாங்கும் த்ரில்லர் என்பதை தாண்டி அற்புதமான படைப்பு. இது பார்வையாளர்களை, இருக்கைகளின் நுனியில் வைத்திருக்கும். ஐஸ்வர்யா, நவீன், சிம்ஹா சிறப்பாக நடித்துள்ளனர்’’ என்றார்.