

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். இவர் மலையாளம், தமிழில் நடித்து வருகிறார். சமீபத்தில், கமல்ஹாசனின் ‘விக்ரம்’, பா. ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது' படங்களில் நடித்திருந்தார்.
ஒணம் பண்டிகையின் போது, தனது குடும்பத்தினருடன் இளம்பெண் ஒருவருடன் காளிதாஸ் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. அந்தப் பெண் பிரபல மாடல் தாரணி காலிங்கராயர் என்பதும், 2019-ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு டைட்டில் வென்றவர் என்பதும் தெரியவந்தது. இருவரும் காதலித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது துபாய் சென்றுள்ளனர். அங்கிருந்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள், அவர்கள் காதலை உறுதிப்படுத்துவதாக உள்ளன என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.