தமிழ் சினிமா
நடிப்புக்கு மீண்டும் திரும்பிய பபிதா
தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட120 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் பபிதா. கமல்ஹாசனின் ‘நாயகன்’ படத்தில் இவர் ஆடிய ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடல் இப்போதும் பிரபலம்.
பழம்பெரும் நடிகர் ஜஸ்டினின் மகளான இவர், திருமணத்திற்குப் பின் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது நடிப்புக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார். “கமல், விஜய், பாக்யராஜ், கார்த்திக் உட்பட பல ஹீரோக்கள் படத்தில் நடித்துவிட்டேன். இப்போது மீண்டும் திரும்பி இருக்கிறேன். இப்போதைய சினிமா நன்றாக இருக்கிறது. வில்லி உட்பட எந்த கேரக்டரிலும் நடிப்பேன். ஆனால், அந்த கேரக்டர் பேசப்பட வேண்டும்” என்கிறார் பபிதா.
