ஜனவரியில் தொடங்குகிறது தனுஷ், சேகர் கம்முலா படம்

ஜனவரியில் தொடங்குகிறது தனுஷ், சேகர் கம்முலா படம்

Published on

தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படம் கடந்த வாரம் வெளியாகி ஓடி கொண்டிருக்கிறது. இப்போது வெங்கி அட்லுரி இயக்கும் ‘வாத்தி’, அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்தப் படம் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in