வீடியோ கேம் கிராஃபிக்ஸ் - பிரபாஸின் ஆதி புருஷ் டீசருக்கு நெட்டிசன்கள் ரியாக்சன் என்ன?

வீடியோ கேம் கிராஃபிக்ஸ் - பிரபாஸின் ஆதி புருஷ் டீசருக்கு நெட்டிசன்கள் ரியாக்சன் என்ன?
Updated on
1 min read

பிரபாஸ் நடிப்பில் ஆதி புருஷ் படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. இதற்கு ட்விட்டரில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில், ராமாயணக் கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதி புருஷ்'. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள். டி - சீரிஸ்,ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் டீசர் குறித்து, ராஜசேகர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மோசமான அனிமேஷன்'' என குறிப்பிட்டுள்ளார்.

ஹரிஷ் என்பவர் ட்விட்டர் பக்கத்தில், ''பாளையத்தம்மன் கிராஃபிக்ஸ் ஆதிபுருஷ் படத்தை விட சிறப்பாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.

ஜெம்ஸ் ஆஃப் பாலிவுட் என்ற ட்விட்டர் பக்கத்தில், ''ஆதிபுருஷ் டீசர் வீடியோகேமில் வரும் கேரக்டர்களைப்போல காட்சிபடுத்தப்பட்டுள்ளது'' என குறிப்பிட்டுள்ளது.

ஜெகதீஷ்குமார் என்பவர், ''ஆதிபுருஷ் டீசர் பாலிவுட் ரெக்கார்ட்களை உடைக்கும்'' என பதிவிட்டுள்ளார்.

சாம் என்பவர், ''படத்தின் விஎஃப்எக்ஸ் சோட்டா பீம் கார்டுன் டீசரைப்போல உள்ளது. பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை'' என குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் ட்விட்டரில் டிஸாபியின்டிங்ஆதி புருஷ் (#DisappointingAdipurish |) என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in