

‘எட்டணா இருந்தா எட்டூரு என்பாட்டை கேக்கும்’ பாடலை பாடியபடியே நடிகர் வடிவேலு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு விரைவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. தொடர்ந்து, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். அவரது படங்களை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தற்போது நடிகர் வடிவேலு தற்போது தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு ‘எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும்’ பாடலை பாடியபடியே நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘போடா போடா புண்ணாக்கு’, ‘எல்லாமே என் ராசாதான்’ படத்தில் ‘எட்டணா இருந்தா எட்டூரு என் பேச்சைக் கேக்கும்’, காலம் மாறிப்போச்சு படத்தில் ‘வாடி பொட்டப்புள்ள வெளியே’ உள்ளிட்ட பல பாடல்களையும் வடிவேலு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.