அவதூறு பரப்ப தனி அலுவலகம் - பிரபல ஹீரோ மீது புகார்

அவதூறு பரப்ப தனி அலுவலகம் - பிரபல ஹீரோ மீது புகார்
Updated on
1 min read

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு. ஹீரோவாக நடித்து வரும் அவர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவர் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்த நடிகரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் கூறியிருப்பதாவது:

சமூக வலைதளங்களில் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலின் போது இந்த விமர்சனங்கள் அதிகமாக இருந்தன. இப்போதும் அது தொடர்கிறது. ஒரு பெரிய ஹீரோ எங்கள் மீது சேற்றைவாரி வீச முயற்சிக்கிறார். என்னைப் பற்றி அவதூறு பரப்புவதற்காகவே, 20-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட அலுவலகத்தை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in