எனக்கு ரூ.1000 கோடி சம்பளமா? - பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சல்மான் கான்

எனக்கு ரூ.1000 கோடி சம்பளமா? - பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சல்மான் கான்
Updated on
1 min read

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர், நடிகர் சல்மான் கான். கடந்த 12 ஆண்டுகளாக நிகழ்சசியை நடத்தி வருபவர், வரவுள்ள பிக்பாஸ் 16 சீசனையும் தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுளளார். முன்னதாக இந்த சீசனில் பணிபுரிய ஆயிரம் கோடி ரூபாய் சல்மான் சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக இதுவரை பேசாத சல்மான், 16வது சீசன் அறிமுக விழாவில் சம்பளம் குறித்து தெளிவுப்படுத்தினார். அதில், "நான் ஆயிரம் கோடி சம்பளம் வாங்கினால் வாழ்க்கையில் அதன் பிறகு சம்பாதிக்கவே வேண்டாமே. ஆயிரம் கோடி சம்பளம் என வதந்தி பரவியதால் கிடைக்காத அந்த பணத்தை கொடுத்த அவர்களுக்கே கொடுக்கலாம் என நினைக்கிறேன். அப்படி செய்தால், அந்த டிவி பயனடையும்.

இந்த அளவுக்கு சம்பளம் பெற்றால் வழக்கறிஞர் கட்டணம் உட்பட பல்வேறு வகை செலவுகளும் அதிகமாகும். மேலும் இந்த செய்தி வருமான வரித்துறைக்கு கிடைக்கும். அவர்கள் நோட்டீஸ் அனுப்பினால் உண்மை வெளிவரும். இந்த 12 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தியதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in