Published : 28 Sep 2022 10:02 AM
Last Updated : 28 Sep 2022 10:02 AM

‘சலார்’ படப்பிடிப்பில் செல்போனுக்கு தடை

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம், ‘சலார்’. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். ஜெகபதிபாபு, பிருத்விராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இதன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாயின. இதற்கு முன்பும் இந்தப் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு, படப்பிடிப்புக்கு வரும் நடிகர், நடிகைகள் உள்பட அனைவரும் செல்போன் எடுத்துவர தடை விதித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x