ஆவணப்படம் ஆனது நயன்தாராவின் காதல் கதை

ஆவணப்படம் ஆனது நயன்தாராவின் காதல் கதை

Published on

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். இதில் ரஜினிகாந்த் , ஷாருக்கான், சூர்யா உட்பட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் காதல் கதை ஆவணப்படமாக உருவாகியுள்ளது. இதை கவுதம்வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இந்த ஆவணப் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாகஉள்ளது. நயன்தாரா கடந்து வந்த முக்கியமான தருணங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.‘நயன்தாரா: பியாண்ட் த ஃபேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in