Last Updated : 26 Nov, 2016 12:21 PM

 

Published : 26 Nov 2016 12:21 PM
Last Updated : 26 Nov 2016 12:21 PM

சண்டக்கோழி 2 படப்பிடிப்பை ஜனவரியில் தொடங்க திட்டம்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சண்டக்கோழி'. 2005ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் 2-ம் பாகம் மூலமாக மீண்டும் இணைய இயக்குநர் லிங்குசாமி - விஷால் முடிவு செய்தார்கள். ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. ஆனால், திடீரென விஷால் - லிங்குசாமிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 'சண்டக்கோழி 2' நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

கீர்த்தி சுரேஷ் நாயகி, யுவன் இசை என படக்குழுவினர் ஒப்பந்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 'சண்டக்கோழி' படத்தில் விஷாலின் அப்பாவாக நடித்த ராஜ்கிரண் இப்படத்திலும் அதே வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஜனவரி முதல் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 'சண்டக்கோழி 2' பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, மார்ச் மாதம் முதல் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x