

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிரியங்கா மோகன் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் அவர் நாயகியாக இப்போது நடித்து வருகிறார்.