கிரைம் த்ரில்லர் கதையில் விதார்த்; 5 வேடத்தில் சூர்யா?

கிரைம் த்ரில்லர் கதையில் விதார்த்; 5 வேடத்தில் சூர்யா?

Published on

நடிகர் விதார்த் நாயகனாக நடிக்கும் கிரைம் திரில்லர் படத்தை, கிரினேடிவ் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ரோஷிணி பிரகாஷ் நடிக்கிறார். இதை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுதுகிறார்.

எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இதன் படப்பிடிப்பு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது என்றும், முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

5 வேடத்தில் சூர்யா?

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார், சூர்யா. யுவி கிரியேஷன்ஸ், ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப் படத்தில், இந்தி நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாகிறது.

இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதில், அரத்தர், வெண்காட்டார், முக்காட்டர், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய பெயர்கள் இடம்பெற்றிருந்தன. சரித்திரப் படமான இதில், இந்த 5 கேரக்டர்களிலும் சூர்யா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in