

> ‘விக்ரம் வேதா’ படம் இந்தியிலும் அதே பெயரில் உருவாகி இருக்கிறது. ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலிகான், ராதிகா ஆப்தே நடித்துள்ள இந்தப் படத்தை 100 நாடுகளில் வெளியிட உள்ளனர்.
> கவுதம் வாசுதேவ் மேனன், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் படத்தை, அடுத்து இயக்க இருக்கிறார்.
> அமலா பால், காளிதாஸ், துஷாரா நடிக்கும் ‘காதல் கொஞ்சம் தூக்கலா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி மோகன். இதை நடிகை ஷர்மிளா மந்த்ரே தயாரிக்கிறார்.
> ஏ.ஆர்.ரஹ்மான், ஜனவரி 28-ல் கோலாலம்பூரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். டி.எம்.ஒய் கிரியேஷன் நிறுவனம் நடத்தும் இதன் அறிவிப்பை, அந்த நிறுவன சேர்மன் முகமது யூசுப், ஹெலிகாப்டரில், 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து வெளியிட்டுள்ளார். அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக ‘மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இதை வெளியிட்டுள்ளது.
> சினிமாவில் வாய்ப்புக்காக பாலியல் சலுகை கேட்கும் போக்கு இருந்தது என்றும் இப்போது கொஞ்சம் முன்னேறி இருப்பதாகவும் கூறியிருக்கிறார், இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர். பாலிவுட் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளில் இது இருப்பதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.