Published : 16 Sep 2022 06:33 PM
Last Updated : 16 Sep 2022 06:33 PM

உலக அளவில் ‘பிரம்மாஸ்திரா’வின் ஒரு வார வசூல் ரூ.300 கோடி

ரன்பீர்கபூர் நடிப்பில் வெளியான 'பிரம்மாஸ்திரா' திரைப்படம் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்துள்ள திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அயன்முகர்ஜி உள்ளிட்டோர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் 4 ஆண்டுகள் படமாக்கப்பட்டது. ஷாருக்கான், அமிதா பச்சன், நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படத்திற்கு ப்ரித்தம் இசையமைத்திருந்தார். சுமார் ரூ.410 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. உலக அளவில் 8,913 திரைகளில் படம் வெளியானது. இந்தியாவை பொறுத்தவரை 5,019 திரைகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படம் முதல் நாள் வசூலாக உலக அளவில் ரூ.75 கோடியை ஈட்டியது. படம் வெள்ளிகிழமை 9-ம் தேதி வெளியாகி ஞாயிற்றுகிழமை 12-ம் தேதி வரையில் உலக அளவில் ரூ.225 கோடியை வசூலித்து. இந்நிலையில், படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், இதுவரை உலக அளவில் 'பிரம்மாஸ்திரா' ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் கரண் ஜோஹர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பாலிவுட்டுக்கு இந்த வருடமே மந்தமாக தொடங்கிய நிலையில், இந்தப் படத்தின் வசூல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் இந்தாண்டு வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படம் 'பிரம்மாஸ்திரா' என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x