Published : 16 Sep 2022 05:33 PM
Last Updated : 16 Sep 2022 05:33 PM

நவம்பரில் வெளியாகிறது மோகன் ஜி - செல்வராகவனின் ‘பகாசூரன்’ 

மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பகாசூரன்’ படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது.

இந்நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை எஸ்.எஸ்.ஐ புரொடஷன் சுப்பையா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x