“முத்துவீரனாக வாழ்ந்திருக்கும் சிம்பு” - நெட்டிசன்கள் பார்வையில் வெந்து தணிந்தது காடு

“முத்துவீரனாக வாழ்ந்திருக்கும் சிம்பு” - நெட்டிசன்கள் பார்வையில் வெந்து தணிந்தது காடு
Updated on
1 min read

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி அமைத்திருப்பதால் படத்துக்கான வரவேற்பு அதிகமாக உள்ளது.

படம் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு தொகுப்பு இது...

நெட்டிசன் ஒருவர், "வழக்கமான கெளதம் மேனன் படமல்ல இது. சிம்புவை சரியாக பயன்படுத்தியுள்ளார். இதற்கு முன் யாரும் (தனுஷ் தவிர) ஒரு கமர்ஷியல் திரைப்படத்தை இப்படி வேரூன்றச் செய்ததாக நான் நினைக்கவில்லை." என்றுள்ளார்.

அதேபோல் மற்றொருவர், "இப்படம் வெறும் வெகுஜனப் படம் என்பதைவிட ஒரு அசுரத்தனமான திரையரங்க அனுபவத்தை தரும் சினிமா" என்றுப் பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர், "முத்துவீரனாக வாழ்ந்திருக்கிறார் சிம்பு. ஒன் மேன் ஷோவாக அவரின் உழைப்பு மிரள வைக்கிறது" என்றுப் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று சில பதிவுகள் இங்கே....

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in