சினிமா தெறிப்புகள் | டாப்ஸியின் கோபம் முதல் ‘ஜவான்’ அப்டேட் வரை

டாப்ஸி
டாப்ஸி
Updated on
2 min read

> விழா ஒன்றில் கலந்துகொண்ட டாப்ஸியிடம், அவர் நடித்த ‘தோபாரா’ படத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது பற்றி கேட்டபோது கோபமடைந்தார். ‘எந்த படத்துக்கு இது நடக்கலை. கேள்வி கேட்கறதுக்கு முன் ஹோம்வொர்க் பண்ணிட்டு வாங்க’ என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

> ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரண் நடிக்கும் படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் ஷங்கர். அவருக்கு உதவும் பொருட்டு, ‘இந்தியன் 2’ படத்தின் சில பகுதிகளை, சிம்புதேவன், ஷங்கரின் முன்னாள் உதவியாளர்கள் வசந்தபாலன், அறிவழகன் ஆகியோர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

> ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்திருக்கும் விக்ரம், த்ரிஷா, தங்கள் ட்விட்டர் பக்கத்தில், ஆதித்த கரிகாலன், குந்தவை என்று பெயர்களை மாற்றி வைத்துள்ளனர்.

> மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் நடிக்கும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

> சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ படத்துக்கு தமிழகத்தை சேர்ந்த அன்பறிவ், பிரம்மாண்ட சண்டைக் காட்சியை அமைக்கின்றனர்.

> அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம், ‘ஜவான்’. பான்இந்தியா முறையில் உருவாகும் இந்தப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே பிரம்மாண்ட செட் அமைத்து நடந்து வருகிறது. இந்நிலையில் 200-250 பெண்கள் பங்குபெறும் சண்டைக்காட்சி இந்தப் படத்துக்காக உருவாக இருக்கிறது. இதற்காக மும்பையில் இருந்துஅவர்கள் சென்னை வர இருப்பதாகவும் ஏழு நாட்கள் இந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in