“முதல் காட்சி பார்க்க வருபவர்கள் நன்றாக தூங்கிவிட்டு வாருங்கள்” - ரசிகர்களுக்கு கெளதம் மேனன் கோரிக்கை

“முதல் காட்சி பார்க்க வருபவர்கள் நன்றாக தூங்கிவிட்டு வாருங்கள்” - ரசிகர்களுக்கு கெளதம் மேனன் கோரிக்கை

Published on

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'வெந்து தணிந்தது காடு'. ஐசரி கணேசன் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் நாளை வெளியாகவுள்ளது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

அது, " முதல்நாள் முதல் (5 மணி) காட்சியை பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு வர வேண்டும். ஏனென்றால், கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் செட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும்" என்று பேட்டி ஒன்றில் கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

வெந்து தணிந்தது காடு முதல்நாள் முதல் காட்சி தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கும் சில இடங்களில் 5 மணிக்கும் தொடங்குகிறது. மேலும் சிம்பு, கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் இணைந்துள்ள மூன்றாவது படம் இது என்பதால் 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளதால் தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in