Published : 13 Sep 2022 06:18 AM
Last Updated : 13 Sep 2022 06:18 AM

விஜய்யின் வாரிசு பட வியாபாரம் - தயாரிப்பாளர் மகிழ்ச்சி

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், ‘வாரிசு’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் வியாபாரப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, தியேட்டர் வெளியீட்டு உரிமை இல்லாமல், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொலைக்காட்சி உரிமை ரூ.50 கோடிக்கும் டிஜிட்டல் உரிமை ரூ.60 கோடிக்கும் வெளிநாட்டு உரிமம் ரூ.32 கோடிக்கும், இந்தி டப்பிங் உரிமை ரூ.32 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆடியோ உரிமை ரூ.10 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. படப்பிடிப்பு முடியும் முன்பே ரூ.180 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் ஆகி இருப்பதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.அந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x