Last Updated : 25 Oct, 2016 03:37 PM

 

Published : 25 Oct 2016 03:37 PM
Last Updated : 25 Oct 2016 03:37 PM

ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாக வடிவேலு ஒப்பந்தம்

ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் வடிவேலு.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ப்ரூஸ்லீ' மற்றும் 'கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படம், சசி இயக்கும் படம், 'அடங்காதே' உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இப்படங்களைத் தொடர்ந்து ராம்பாலா இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இப்படத்தை ஸ்டீபன் தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார் வடிவேலு. காமெடி கலந்த வில்லன் வேடம் என புதுமையாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ராம்பாலா. இக்கதையைக் கேட்டவுடனே 'நான் நடிக்கிறேன்' என்று ஒப்பந்தமாகி விட்டார் வடிவேலு" என்று தெரிவித்தார்கள்.

முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வடிவேலு ஆகியோருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x