எடுக்க மறந்த இறப்புக் காட்சி சென்டிமென்ட் - ‘விக்ரம்’ பட அனுபவம் பகிரும் காய்த்ரி

‘விக்ரம்’ படப்பிடிப்பின்போது...
‘விக்ரம்’ படப்பிடிப்பின்போது...
Updated on
1 min read

‘விக்ரம்’ படத்தின் 100-வது நாளையொட்டி படத்தின் அனுபவத்தை நடிகை காயத்ரி பகிர்ந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், பஹத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடித்த திரைப்படம் 'விக்ரம்'. உலக அளவில் பெரும் வசூலை வாரிக்குவித்த இந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஓடிடியில் படம் வெளியாகி சாதனை படைத்திருந்தாலும், இன்னுமே கூட சில திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

'விக்ரம்' படம் வெளியாகி இன்றும் 100 நாள் கடந்துவிட்டது. 100-வது நாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 22 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த ஆடியோவில் அவர் உணர்ச்சிபொங்க பேசியுள்ளார். அதில் பேசும் அவர், ‘ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் நூறாவது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை காயத்ரி படத்தில் நடித்த தன்னுடைய அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், ''பொதுவாக ஒரு படத்தில் ஒரு நடிகர் இறந்துவிட்டது போல நடித்தால், கண் விழித்து எழுந்து சிரிப்பது போன்ற காட்சியையும் சேர்த்தே கூடுதலாக எடுப்பது வழக்கம். காரணம், அந்த நடிகர் உயிருடன் உள்ளார்; இது வெறும் நடிப்பு தான் என்பதை உலகத்திற்கு சொல்வதற்காக இவ்வாறு செய்யப்படும்.

‘விக்ரம்’ படத்தில் நான் இறந்த காட்சியைப் படமாக்கியபோது அப்படியொரு கூடுதல் காட்சியை எடுக்க மறந்து விட்டோம். நேரமின்மை காரணமாக லைட்டிங் ஏற்பாடுகளையும் மாற்ற முடியவில்லை. எனவே, புதுமையாகச் செய்வதற்காக மேற்கண்ட புகைப்படத்தை எடுத்துவைத்துக்கொண்டோம். எல்லோரும் உங்க தலை எங்கே என கேட்கிறார்கள். இதோ பாருங்க'' என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in