

மும்பை லால்பாக்கில் உள்ளது லால்பாக்சா ராஜா கோயில். இந்தியில் அமிதாப்பச்சனுடன் ‘குட்பை’ படத்தில் நடித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்தக் கோயிலுக்கு நேற்று முன்தினம் சென்றார்.
அப்போது ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு புகைப்படம் எடுக்க கூடினர். கூட்டம் அதிகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் உதவியாளர்கள் பத்திரமாக உள்ளே அழைத்து சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர் வெளியே அழைத்து வரப்பட்டு காரில் ஏற்றப்பட்டார். அவர் கூட்டத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
கோயிலுக்குள், சாமி சிலை அருகே அவர் போட்டோவுக்கும் போஸ் கொடுத்துள்ளார். இதை சமூக வலைதளத்தில் பலர் கண்டித்துள்ளனர். அவர் சாமி கும்பிட வருகிறாரா, போஸ் கொடுக்க வருகிறாரா? என்றும் ட்ரோல் செய்துள்ளனர்.