

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உட்பட பலர் நடிக்கும் படம், ‘விடுதலை’. ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாகிறது. படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படவேண்டி இருக்கிறது.
படத்துக்காக ரூ.10 கோடி மதிப்பில் ரயில் மற்றும் ரயில்வே பாலம் செட் அமைக்கப்பட்டுள்ளது. பல்கேரிய ஸ்டன்ட் கலைஞர்கள் ஆக்ஷன் காட்சியில் பங்கேற்கிறார்கள் என்று படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.