Last Updated : 21 Oct, 2016 12:18 PM

 

Published : 21 Oct 2016 12:18 PM
Last Updated : 21 Oct 2016 12:18 PM

ஸ்டார்ட்... கேமரா... - 5 அம்சங்களில் இமைக்கா நொடிகள்

* அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப் நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியிருக்கிறது.

* 'டிமான்ட்டி காலனி' படத்தைத் தொடர்ந்து கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அஜய் ஞானமுத்து.

* அதர்வா நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ராஷி கண்ணா, இயக்குநர் அனுராக் கஷ்யாப் என திரையுலக முன்னணியினர் இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

* 'இமைக்கா நொடிகள்' என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக 'ஹிப் ஹாப்' தமிழா, ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர், படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.

* 'ருத்ரா' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் அனுராக் கஷ்யாப் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x