Last Updated : 22 Oct, 2016 02:14 PM

 

Published : 22 Oct 2016 02:14 PM
Last Updated : 22 Oct 2016 02:14 PM

யு சான்றிதழுடன் அக்.28-ல் வெளியாகிறது கொடி

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கொடி' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அக்டோபர் 28ல் வெளியாகிறது.

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், சரண்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கொடி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் முதல் இரட்டை வேடம் இப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகளும் முடிவுற்றன. ஆனால் 'தொடரி' வெளியீட்டு தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. 'தொடரி' வெளியானவுடன், 'கொடி' தீபாவளி வெளியீடு என தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு.

தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 28ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x