Published : 01 Sep 2022 01:11 PM
Last Updated : 01 Sep 2022 01:11 PM
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் புகழுக்கு இன்று எளிமையான முறையில் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல ஷோக்களிலும் நடித்து இவர் பிரபலமடைந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிடைத்த வரவேற்பின் மூலமாக 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் இன்று காலை நடிகர் புகழ் மற்றும் பென்ஸியாவுக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் தற்போது கரம்கோத்துள்ளனர். இந்த திருமணத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தவிர, திரையுலகைச் சேர்ந்த பலரும் புகழ் - பென்ஸியா ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
*செம்மொழியான எம்மொழி தமிழ் போல் தழைத்தோங்கிட வாழ்த்துகிறோம்*
— virumandi (@pkvirumandi1) September 1, 2022
*விஜய் தொலைக்காட்சி புகழ் அன்பு தம்பி @VijaytvpugazhO பென்சியா ஆகியோரின் திருமண நிகழ்வில் நானும் அண்ணன் இயக்குநர் @SasikumarDir அவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் pic.twitter.com/fC3VmehKGr
Sign up to receive our newsletter in your inbox every day!