அமலா பாலை ஏமாற்றிய இளைஞர் கைது

அமலா பாலை ஏமாற்றிய இளைஞர் கைது
Updated on
1 min read

தமிழில், ‘மைனா’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். இவரும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து 2014-ம் ஆண்டு திருமணம் செய்தனர். கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு பிரிந்தனர். இந்ந்நிலையில் அமலா பால், பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி என்பவருடனும் அவர் குடும்பத்தினருடன் பழகி வந்துள்ளார். அவர்களுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்காக 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகிலுள்ள பெரியமுதலியார் சாவடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தனர்.

இந்நிலையில் பவ்நிந்தர் சிங் தத், அமலா பாலுடன் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி விழுப்புரம் காவல் அலுவலகத்தில் 26-ம் தேதி, அமலா பால் புகாரளித்தார். அதில், பவ்நிந்தர் சிங் தத்தும், அவர் உறவினர்களும் தன்னை ஏமாற்றியதாகவும் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதனடிப்படையில் 16 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பவ்நிந்தர் சிங்கை நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in