மனோஜ் தேசாய் உடன் விஜய் தேவரகொண்டா
மனோஜ் தேசாய் உடன் விஜய் தேவரகொண்டா

தியேட்டர் அதிபரிடம் வருத்தம் தெரிவித்தார் விஜய் தேவரகொண்டா

Published on

‘லைகர்’ தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திமிரானப் பேச்சுதான் காரணம் எனக் கூறியிருந்தார், மும்பை கெயிட்டி கேலக்ஸி, மராத்தா மந்திர் திரையரங்க நிர்வாக இயக்குநர் மனோஜ் தேசாய்.

‘லைகர் படத்தை புறக்கணியுங்கள்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டானபோது, ‘யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்’ என்று ஆணவமாக விஜய் தேவரகொண்டா பேசியதாகவும் இதனால்தான் ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை என்றும், தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரவேண்டாம் என்றால் ஓடிடி படங்களில் நடியுங்கள் என்றும் மனோஜ் தேசாய் விமர்சித்திருந்தார்.

அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், அவரை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா, காலில் விழுந்து ஆசி பெற்றார். தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அவர், தான் எதற்காக அப்படி பேசினேன் என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து அவரைப் பாராட்டியுள்ள தேசாய், ‘விஜய் தேவரகொண்டா பேசியதை முழுமையாக பார்க்காமல்தான் பேசிவிட்டேன். அவர் நல்ல மனிதர். அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in