Published : 30 Aug 2022 09:11 AM
Last Updated : 30 Aug 2022 09:11 AM

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் இணைந்தார் ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங் | கோப்புப் படம்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு தொடங்கியது. லைகா புரொடக்ன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். பல்வேறு காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த 25ம் தேதி முதல் மீண்டும் இதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ரகுல் பிரீத் சிங் இதன் படப்பிடிப்பில் இப்போது இணைந்துள்ளார். அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x