Last Updated : 02 Jun, 2014 11:12 AM

 

Published : 02 Jun 2014 11:12 AM
Last Updated : 02 Jun 2014 11:12 AM

ஹாலிடே படத்திற்கு விஜய் வாழ்த்து!

'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்கான 'ஹாலிடே' படம் வெற்றியடைய நடிகர் விஜய் தனது வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.

விஜய், காஜல் அகர்வால், சத்யன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் 'துப்பாக்கி'. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். தாணு தயாரித்தார்.

'துப்பாக்கி' வெளியாகி வசூலில் பல சாதனை படைத்தது. இப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் அக்‌ஷய் குமார் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸே இயக்கினார். 'ஹாலிடே' என்ற பெயரில் தயாராகி இருக்கும் இப்படம் ஜுன் 6ம் தேதி வெளியாக இருக்கிறது.

தற்போது மீண்டும் விஜய்யை வைத்து 'கத்தி' படத்தினை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படப்பிடிப்பினை முடித்து விட்டு 'ஹாலிடே' படத்தின் விளம்பர பணிகளுக்காக ஏ.ஆர்.முருகதாஸ் கிளம்பினார்.

அப்போது விஜய், 'ஹாலிடே' வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் " ஜுன் 6ம் தேதி 'ஹாலிடே' வெளியாகிறது. இதற்காக மும்பைக்கு போய் கொண்டிருக்கிறேன். 'ஹாலிடே' படம் வெற்றியடைய விஜய் என்னை கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தார். இதற்காக விஜய்க்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

அதுமட்டுமன்றி 'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x