Published : 23 Aug 2022 02:28 PM
Last Updated : 23 Aug 2022 02:28 PM

‘குருதி ஆட்டம்’ குறைகளுக்காக மன்னியுங்கள்: இயக்குநர் ஸ்ரீகணேஷ்

'குருதி ஆட்டம் படத்தில் இருக்கும் குறைகளுக்காக என்னை மன்னியுங்கள். கடினமாக உழைத்து என் அடுத்த படத்தை மிகச் சிறந்த படமாக கொடுப்பேன்'' என்று இயக்குநர் ஸ்ரீகணேஷ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'குருதி ஆட்டம்'. இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான அறிவிப்பில், படத்தின் குறைகளுக்கு இயக்குநர் ஸ்ரீகணேஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''குருதி ஆட்டம் வெளியீட்டின்போது ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி. என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகளில்லை. இந்தப் படத்தில் இருக்கும் குறைகளுக்காக என்னை மன்னியுங்கள். கடினமாக உழைத்து என் அடுத்த படத்தை மிக சிறந்த படமாக கொடுப்பேன். குருதி ஆட்டம் திரையரங்கில் பார்க்க தவறியவர்களுக்காக வருகிற செப்டம்பர் 2 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

தவறவிடாதீர்!



Sign up to receive our newsletter in your inbox every day!

 
x